1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 16 ஜூன் 2016 (12:28 IST)

3 வயது சிறுமியின் உயிரை காவு வாங்கிய பள்ளி வாகனம்: சோகத்தில் கிராமம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே உள்ள சிங்கராயபுரத்தை சேர்ந்த 3 வயது சிறுமி கவிநிலா பள்ளி வாகனம் மோதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இந்த அகால மரணத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


 
 
சிங்கராயபுரத்தை சேர்ந்த பார்த்திபன் என்பரின் மகள் கவிநிலா. இவர் தனது மகளை எஸ்.எம்.எச்.எஸ் என்ற தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்த்திருந்தார். பள்ளி முடிந்து மாலை பள்ளி வாகனத்தில் வீடு திரும்பிய கவிநிலா, வீட்டின் வாசல் அருகே இறங்கி, வேனின் முன்புறமாக சென்று சாலையை கடக்க முயன்றுள்ளார்.
 
அப்போது, வேன் ஓட்டுநர் சிறுமி சாலையை கடப்பதை பார்க்காமல் வேனை எடுத்து சிறுமி மீது மோதியதில் சக்கரம் ஏறி சிறுமி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
சிறுமியின் மீது வேனை ஏற்றி கொன்றதால் தப்பித்த ஓட முயன்ற ஓட்டுனரை கிராம மக்கள் நையப்புடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் ஓட்டுநரின் அலட்சியத்தால் 3 வயது சிறுமியின் உயிர் பரிதாபமாக பலியாகியுள்ளது.