1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 29 ஜூன் 2017 (11:57 IST)

14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 67 வயது முதியவர்!

14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 67 வயது முதியவர்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறி 67 வயதான முதியவர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
உடுமலையை சேர்ந்த 14 வயதான மாணவி அஸ்வினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவிக்கு அவரது வீட்டின் அருகில் உள்ள ராஜன் என்ற 67 வயதான முதியவர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
ஆனால் இந்த விவகாரம் குறித்து மாணவி வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் கூறவில்லை. நீண்ட நாட்களாக இந்த சம்பவம் நடந்து வர மாணவியின் உடற்கூறு நடவடிக்கையில் மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.
 
இதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் அது குறித்து மாணவியிடம் விசாரித்துள்ளனர். அதன் பின்னர் தான் ராஜன் என்ற அந்த முதியவர் மாணவிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவது தெரியவந்தது.
 
தற்போது மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் முதியவர் ராஜனை கைது செய்த உடுமலை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை சிறையில் அடைத்துள்ளார்.