1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 மே 2023 (07:49 IST)

கள்ளச்சாராயம் உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆக உயர்வு! அதிர்ச்சி தகவல்..!

விழுப்புரம் அருகே மரக்காணம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர்களில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் நேற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விழுப்புரம் அருகே மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது ராஜவேல் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 
 
மேலும் சிலர் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்ததோடு அவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் ரக சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.
 
 
Edited by Siva