திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (16:27 IST)

தேனியில் 125 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை சம்மந்தப்பட்ட பொருட்கள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேனி கடை ஒன்றில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து கடந்த வருடம் ஜூன் மாதம் குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு சிக்கிய டைரி ஒன்றில் குட்கா விற்பனையை கண்டுக் கொள்ளாமல் இருக்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சம்மந்தமாக சில உணவுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளையும் கைது செய்து விசாரித்து வருகிறது.

இத்தகைய கைதுகளால் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் வியாபாரம் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் போலிஸார் தேனியில் உள்ள கடை ஒன்றில் சோதனை நடத்தியபோது 125 கிலோ அளவுக்கு புகையிலை சம்மந்தப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. அதனைப் போலீஸார் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளரை விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ஒரு லட்ச ரூபாய் இருக்குமென போலிஸார் அறிவித்துள்ளனர்.