திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (11:55 IST)

அரியலூர் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 11 பேர் பலி

அரியலூர் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.


 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 25 பேருக்கும் மேற்பட்டோர் சரக்கு ஆட்டோ ஒன்றில் துக்க விழாவிற்கு சென்றுவிட்டு இரவு திரும்பிக் கொண்டிருந்தனர்.


உடையார்பாளையம் அருகே வந்தபோது எதிரே வந்த சிமென்ட் பவுடர் ஏற்றிய லாரி ஒன்று சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 10 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த உடையார்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.