1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (14:53 IST)

நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 10 அமைச்சர்கள் அவசர ஆலோசனை!

நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 10 அமைச்சர்கள் அவசர ஆலோசனை!

திகார் சிறையில் இருந்து தினகரன் ஜாமீனில் வெளியே வந்ததில் இருந்து அதிமுக வட்டாரம் மிகவும் பதற்றமுடன் காணப்படுகிறது. தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட உள்ளதே இதற்கு காரணமாக பேசப்படுகிறது.


 
 
இந்நிலையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தினகரனுக்கு எதிராக 10 அமைச்சர்கள் தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன. தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக ஊடகத்தினர் முன்னிலையில் கூறிய அமைச்சர்களில் நிதியமைச்சர் ஜெயக்குமார் முக்கியமானவர்.
 
தற்போது வெளியே வந்துள்ள தினகரன் கட்சி பணிகளில் ஈடுபட உள்ளதாக அறிவித்ததும் சில அமைச்சர்கள் அதனை எதிர்க்கும் விதமாக தினகரன் கட்சி பணிகளில் ஈடுபடுவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே முடிவெடுப்பார் என கூறினார். மேலும் அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை அமைச்சர்கள் யாரும் சென்று பார்க்கமாட்டோம் என்றார் அதிரடியாக. இதனை கட்சியின் கருத்தாக அமைச்சர் செங்கோட்டையனும் ஆதரித்தார்.
 
இந்நிலையில் தனக்கு ஆதரவான எம்எல்ஏக்களை கொண்டு சிலருக்கு அமைச்சர்கள் பதவி அளிக்குமாறு முதல்வரை தினகரன் வலியுறுத்தியதாகவும், இல்லையென்றால் அவர்களை வைத்து ஆட்சியை கலைக்கவும் தினகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்த சூழ்நிலையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 10 அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தி வருவது அதிமுகவில் பரபரப்பாக பேசப்படுகிறது.