மோடி, உள்ளிட்ட வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு - தா.பாண்டியன் வாழ்த்து

Suresh| Last Updated: வெள்ளி, 16 மே 2014 (16:31 IST)
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நடந்து முடிந்த 16வது மக்களவைத் தேர்தல் பொதுவாக அமைதியாக நடந்தேறியது. மக்களின் தீர்ப்பின்படி நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது.
 
பொது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சி வோட்பாளர்களுக்கும் அக்கட்சியின் தலைவர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
தமிழ்நாட்டில் தமிழக முதலமைச்சர் தலைமையில் அதிமுக இதுவரை கண்டிராத பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களின் தீர்ப்பை ஏற்று, மதித்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். வெற்றி பெற்றுள்ளோர் வாக்குறிதிகளை நிறைவேற்றிட வேண்டுமெனவும் கேட்டுகொள்கிறேன்" என்று தா. பாண்டியன் கூறியுள்ளார்.
 
மேலும் அவர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வோட்பாளர்களின் வெற்றிக்காக ஒத்துழைத்தவர்களுக்கும், வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
Lok Sabha election, T. Pandian, CPI, Vote Counting, Modi,  PJP leading, BJP government


இதில் மேலும் படிக்கவும் :