மகனின் தலையில் கல்லை போட்டு கொன்ற தாய்

Last Updated: வெள்ளி, 28 மார்ச் 2014 (16:01 IST)
ஈரோடு அருகே பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனின் தலையில் கல்லை போட்டு கொன்ற தாயை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மனைவி ராஜம்மாள் (40). கருத்து வேறுபாட்டால் கணவன்– மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள். ராஜம்மாள் தனது மகன் செல்வராஜியுடன் வாழ்ந்து வந்தார்.

செல்வராஜ் கோபி மொடச்சூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்தார். இந்நிலையில் செல்வராஜ் தாயாரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தாராம். மேலும் ஒரு பெண்ணை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தும் தனது தாயாரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் செல்வராஜ் தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். பின்னர் செல்வராஜ் வீட்டில் படுத்து தூங்க சென்றார். மகனின் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த ராஜாம்மாள் வீட்டின் வெளியே கிடந்த பெரிய கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த மகன் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகலவறிந்த கோபி காவல் ஆய்வாளர் ஜெச்சந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மகனை கொன்ற தாயார் ராஜம்மாளை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :