செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 7 ஏப்ரல் 2014 (14:04 IST)

பாமக தேர்தல் துறை அங்கீகாரம் பெறாத கட்சியாகும்; வேட்புமனு தள்ளுபடி

பாமக தேர்தல் துறை அங்கீகாரம் பெறாத கட்சியாகும். எனவே இந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும். ஆனால் சிதம்பரம் தொகுதி பாமக வேட்பாளர் மணிரத்தினம் மனுவில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள் முன்மொழிந்து இருந்தனர். இதனால் அவருடைய மனுவை மாவட்ட ஆட்சியர் தள்ளுபடி செய்தார்.
 
சிதம்பரம் தொகுதி பாமக வேட்பாளராக தொழில் அதிபர் மணிரத்னம் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் தேர்தல் அதிகாரியும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான சரவணன் வேல்ராஜியிடம் மனுதாக்கல் செய்தார். மொத்தம் 4 வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி சுதா மனு தாக்கல் செய்தார்.
 
வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று காலை நடைபெற்றது. அதில் மணிரத்னத்தின் வேட்பு மனுவை முறையாக இல்லை என கூறி வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் தள்ளுபடி செய்தார். அவர் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
 
பாமக தேர்தல் துறை அங்கீகாரம் பெறாத கட்சியாகும். எனவே இந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும். ஆனால் மணிரத்தினம் மனுவில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள் முன்மொழிந்து இருந்தனர். இதனால் அவருடைய மனுவை மாவட்ட ஆட்சியர் தள்ளுபடி செய்தார்.
 
அவருடைய மனைவி சுதாவுடைய மனு பரிசீலனை செய்யப்படுகிறது. அவருடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால் சுதா பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
 
மணிரத்தினம் சமீபகாலம் வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார். அவர் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் கேட்டார். ஆனால் அவருக்கு டிக்கெட் கொடுக்கப்படவில்லை. இதனால் பாமகவில் சேர்ந்தார். அதில் அவருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.