சென்னையில் மு.க.அழகிரி-தயாளு அம்மாள் சந்திப்பு

Last Updated: வியாழன், 27 மார்ச் 2014 (14:04 IST)
 சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளுடன் அழகிரி சந்தித்து பேசியுள்ளார்.
திமுக தலைவர்களைப் பற்றி அவதூறு கூறி வருவதாலும், அவர் வெளியிடுகின்ற கருத்துகள் திமுகவிற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், களங்கம் கற்பிக்கும் வகையிலும் இருப்பதால் திமுகவில் இருந்து மு.க.அழகிரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். 
 
இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாராளுமன்ற தேர்தலில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். 
 
அப்போது மதுரையில் இருந்து சென்னை வந்த மு.க.அழகிரி, கோபாலபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்று, தன்னுடைய தாயார் தயாளு அம்மாளை சந்தித்தார். தன்னுடைய தாயாரிடம் அரசியல் எதுவும் பேசாமல், தாயாரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். ஏறத்தாழ அரை மணி நேரம் தன்னுடைய தாயாருடன் இருந்து விட்டு அழகிரி புறப்பட்டு சென்றார்.


இதில் மேலும் படிக்கவும் :