மும்பையில் ரயிலில் தண்டவாளத்தில் விழுந்து பலியான பெண் : அதிர்ச்சி வீடியோ
மும்பையில் உள்ள போரிவாலி ரயில் நிலையத்தில் 55 வயது பெண் ஒருவர், ரயிலில் இருந்து இறங்கும்போது, கால்தவறி தண்டாவளத்தில் விழுந்து பலியான சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
மும்பை போரிவாலி ரயில் நிலையத்திலிருந்து செல்லும் வதோதரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு குடும்பம் ஏறியது. ரயில்லுக்கு வர வேண்டிய, குடும்ப உறுப்பினர்கள் சில பேர் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர்கள் ரயிலை விட்டு கீழே இறங்க முடிவெடுத்தனர்.
ஆனால் அதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. ஒரு இளைஞரும், பெண்ணும் ஓடும் ரயிலில் இருந்து இறங்கி விட்டனர். ஆனால் 55 வயது பெண் இறங்கும் போது, தடுமாறி, தண்டவாளத்தில் கீழே விழுந்து, ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானர்.
இந்த சம்பவங்கள் எல்லாம், ரயில் நிலையத்தில் இருண்டஹ் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.