மே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27


Abimukatheesh| Last Modified திங்கள், 1 மே 2017 (16:07 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள்,  பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

 


வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். சகோதரங்கள் சில நேரங்களில் கோபப்பட்டாலும் அனுசரித்து போவார்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கசப்புணர்வு நீங்கும். மனைவியின் உடல் நிலை சீராகும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வெளிநாட்டுப் பயணம் அமையும். சிலர் வீடு மாறுவீர்கள். வாகனம் அமையும். அரசு காரியங்கள் பிற்பகுதியில் நல்ல விதத்தில் முடியும்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தில் இருந்து வந்த பூசல்கள் மறையும். மாதத்தின் மையப்பகுதியில் பணப்புழக்கம் அதிகரிக்கும் ஆனால் செலவுகளும்,  திடீர் பயணங்களும் துரத்தும். சமையலறை சாதனங்கள்,  ஃப்ரிட்ஜ் பழுதாகும். மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும். தந்தைவழி சொத்து கைக்கு வரும்.

கன்னிப்பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வீண் பழி, மனக்குழப்பம்,  தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் அலட்சியப் போக்கு மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உத்யோகக்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். சக ஊழியர்களிடம் கொஞ்சம் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது.

கலைத்துறையினர்களே! போராடி படைப்புகளை வெளியிடுவீர்கள். எதிர்ப்புகளை கடந்து ஏற்றம் பெறும் மாதமிது. 
   
 
அதிஷ்ட தேதிகள்: 9, 3, 12, 21, 18
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனிஇதில் மேலும் படிக்கவும் :