மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
தனது தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும்.
பெண்களுக்கு எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும்.
பரிகாரம்: ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.