பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31

Sugapriya Prakash| Last Modified சனி, 1 பிப்ரவரி 2020 (16:27 IST)
பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
 
வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் கொஞ்சம் பதற்றத்தை குறைத்துக் கொள்வது நல்லது. மாதம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர்  பயணங்கள் உண்டாகும், நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள். மனத் தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியலில் உள்ளவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
 
பரிகாரம்: அபிராமி அந்தாதி சொல்லி அம்மனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். பஞ்சமுக விளக்கு ஏற்றுவது சிறந்தது.


இதில் மேலும் படிக்கவும் :