பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28

Sugapriya Prakash| Last Modified சனி, 1 பிப்ரவரி 2020 (16:21 IST)
பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ...

 
எந்த ஒரு விஷயங்களிலும் நிதானத்தை கடைப்பிடிக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.

வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு எதிர்பாராத திருப்பம் ஏற்படும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம்  காணப்படும்.
 
பரிகாரம்: சிவனை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :