1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 31 டிசம்பர் 2016 (15:49 IST)

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.

 
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பணம் வரும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். உறவினர்கள்,  நண்பர்கள் வகையில் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள்.

மகளின் கூடா நட்பு விலகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து முன்கோபம், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் நிதானம் அவசியம்.

வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். என்றாலும் புதியவர்களின் நட்பால் உங்களின் பிரச்னைகள் பாதியாக குறையும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். வீடு,  வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வாருங்கள். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது.

கன்னிப் பெண்ளே! பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த பெரிய முடிவும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். ஓரளவு லாபம் வரும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

கலைத்துறையினர்களே! உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் வரும். வளைந்துக் கொடுத்து முன்னேறும் மாதமிது.   
 
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 10, 12, 21
அதிஷ்ட எண்கள்: 2, 7
அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, ஆலிவ்பச்சை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்