திங்கள், 18 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை மரத்தை வெட்டுவது ஏன்???

விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை மரத்தை வெட்டுவது ஏன்???

நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் 9-ம் நாள் விழா சரஸ்வதி பூஜையாகும். அன்றைய தினம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.


 
 
நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜை செய்ய இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினாலே போதுமானது. அம்பிகையின் அருள் பூரணமாய் அருளப்படும் என்பதில் எந்தவித ஐயமும் தேவையில்லை.
 
விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை மரத்தை வெட்டுவது கோவில்களில் வழக்கமாக உள்ளது. ஒரு முறை பண்டாசுரனுடன் , பார்வதி தேவி போர் புரிந்தார். பலமுறை போரிட்டும், பார்வதி தேவியால், பண்டாசுரனுனை அழிக்க முடியவில்லை. 
 
இதையடுத்து பார்வதி தேவி, சிவபெருமானை வேண்டினார். அப்போது சிவபெருமான், விஜயதசமியில் போரிடும்படி கூறினார். அதன்படி பார்வதியும், விஜயதசமி தினம் ஒன்றில் பண்டாசுரனுடன் போரிட்டார். அப்போது போரில் தொல்வியுற்ற பண்டாசுரன், வன்னி மரத்தில் புகுந்து ஒளிந்துகொண்டான்.

இதனை பார்த்ததும் பார்வதிதேவி, வன்னி மரத்தை வெட்டி, அதில் ஒளிந்திருந்த அசுரனை சம்ஹாரம் செய்தார். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கப்படலாயிற்று. பண்டாசுரனை அழித்த மாலை வேலையில், இதனை நினைவு கூறும் விதமாக வாழை மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.