1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasiakala

உங்கள் மேனி மண மணக்க…..!

பருவ வயது ஆண்களுக்கும், பெண்களுக்கும் முகப்பரு எவ்வளவு பிரச்சனையோ, அது போல வியர்வை நாற்றமும், மிகப்பெரிய பிரச்சனையாகும். உங்கள் உடல் மணக்க இரசாயனம் கலக்காத இயற்கைப் பொருட்களைக் கொண்டு நல்ல வாசனை பெறலாம்.


 

 
வெட்டிவேர் - 50 கிராம்
ரோஜாஇதழ் - 50 கிராம்
எலுமிச்சம் பழத்தோல் - 50 கிராம்
சீயக்காய் தூள் - 50 கிராம்
ஆவாரம் பூ காய்ந்தது - 50 கிராம்
புதினா இலை காய்ந்தது - 50 கிராம்
 
இவை அனைத்தையும் நன்கு இடித்து பவுடராக்கி கொண்டு தினமும் குளிப்பதற்கு முன் சிறிது விட்டு குழப்பி உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் போய் உங்கள் உடலிலிருந்து நல்ல மணம் வீசும்.

மேலும் உணவில் அதிகளவு பச்சைக் காய்கறிகள் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. நன்கு நீர் அருந்த வேண்டும். தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அக்குள் பகுதிகளில் உள்ள ரோமங்களை அடிக்கடி நீக்கிவிடுவது நல்லது.