1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெந்தயக்கீரையை தொடர்ந்து சாப்பிடுவது நல்லது ஏன்...?

வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டு உள்ளன. இரும்புச்சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் உண்டு வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
 
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்துக் சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும். வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும்.
 
வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு,  இரத்தசோகை ஆகியவை குணமடையும்.
 
கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
 
இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது  நல்லது.
 
வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.
 
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர, காசநோயும் குணமாகும் என்று கூறப்படுகிறது. உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். குடல் புண்கள் நீங்கும்.
 
வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாவதோடு, உடல் முழுவதுமே சுத்தமாகும்.
 
வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். மேலும் இக்கீரை மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் குணமாக்குகிறது.