செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கொட்டை கரந்தையின் மருத்துவ நன்மைகள் என்ன...?

கொட்டை கரந்தை சிறு செடிகளாக வயலோரங்களில் களைச்செடியாக வளருகின்றன. பூக்காத அல்லது பூக்க ஆரம்பித்துள்ள கொட்டைகரந்தை செடியின் இலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஏராளமான வேதிச் சத்துக்கள் அடங்கியுள்ளன. 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, செல்களின் அழிவை கட்டுப்படுத்தி, உடல் உறுப்புகளுக்கு வலிமையையும், உடலுக்கு ஊட்டத்தையும் தரும் அற்புத மூலிகை கொட்டை கரந்தை.
 
நெற்பயிர் அறுவடைக்கு பிறகு வயல்களிலும் முளைத்து கிடக்கும். நல்ல மணம் கொண்ட சிறு செடியினம்.  செடியின் உச்சியில் பந்து  போன்ற இதன் பூக்கள் மொட்டை தலைபோன்று காட்சியளிக்கும். இதனால் மொட்டை கரந்தை என்ற பெயர் இதற்கு உண்டு.
 
பூக்காத கொட்டைகரந்தை செடிகளின் இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 1 முதல் 2 கிராமளவு  தேனுடன் கலந்து சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுவதுடன் பார்வை கூர்மை அடையும். இளநரை மாறும்.
 
கரந்தையில் வெண்மை, செம்மை என இரண்டு வகையுண்டு, மலமிளக்கியாகவும், தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். நுரையீரல்நோய், யானைக்கால் நோய், ரத்தசோகை, பெண்களின் கர்ப்பபை வலிகள், மூலம் மூச்சிரைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி இருமல், விரைவீக்கம், பெருங்குடல்வலி ஆகியவற்றை நீக்க வல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயநோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.