1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (16:11 IST)

தேனில் ஊறவைத்த பூண்டை சாப்பிடுவதால் என்ன பலன்கள்...?

Garlic soaked in honey
தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.


சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.

உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. பிறகு நற்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.

எடை இழப்பு, ஜலதோஷம், நச்சு நீக்கம் மற்றும் பலவற்றிற்கு பூண்டு எப்போதும் ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் என்று கூறப்படுகிறது. தேனுடன் பூண்டை இணைத்தால் அவற்றின் நன்மைகள் உடனடியாக இரட்டிப்பாகும்.

உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

நல்ல மருத்துவ குணம் வாய்ந்த  தேன் மற்றும் பூண்டை சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.

தேனில் ஊறவைத்த பூண்டு செய்முறை: முதலில் பூண்டை தோலுரித்து இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு, காற்று புகாத கண்ணாடி ஜாடியில் பச்சையாக, பேஸ்டுரைஸ் செய்யப்படாத தேனில் கலக்கவும். பின்னர் ஒரு வாரம் ஊற வைக்கவும். அவ்வளவுதான் தேனில் ஊறவைத்த பூண்டு தயார்.