1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 8 டிசம்பர் 2021 (14:38 IST)

டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன...?

இது பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். டிராகன் பழம் பல நன்மைகளை கொண்ட பழமாகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டிருக்கும். 

டிராகன் பழத்தில் வைட்டமின் சி அதிகளவு உள்ளதால், இது சருமத்திற்கு மிகவும் நல்லது சருமத்தை நல்ல நிறத்துடன் வைக்க உதவுகின்றது. இதில் உள்ள வைட்டமின் பி1, பி2, பி3 ஆகியவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.
 
டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகின்றது. இதனால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் நன்கு செரிமானம் அடைவதற்கும் உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கலாம். மேலும் குடல் எரிச்சல் அல்லது குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுகிறது.
 
இந்த டிராகன் பழம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இது உடலிற்கு குளிர்ச்சியை தரக்கூடியதாகும். டிராகன் பழத்தில் உள்ள விதைகள் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் ஒயின் மற்றும் பல பானங்கள் தயாரிக்க இந்த பழத்தை உபயோகிக்கின்றன. 
 
டிராகன் பழம், இதயத்தில் உள்ள இரத்த நாளங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது இதில் உள்ள விட்டமின் பி3 உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடலை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள கால்சியம் பாஸ்பரஸ் ஆகியவை எலும்புகளை வலிமையாகவும், பற்களை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
 
டிராகன் பழம் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு சிறந்த ஆற்றலை அளித்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செல்களின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் ப்ரீ ராடிக்கல் என்னும் அடிப்படை கூறுகளை அழிக்க இந்த பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உதவுகிறது. இதனால் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை தடுக்கப்படுகிறது.