1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (17:06 IST)

மருத்துவகுணம் அதிகம் நிறைந்துள்ள வெட்டிவேர் !!

வெட்டி வேரில் மருத்துவ குணம் அதிகம் நிறைந்துள்ளது. புல் இனத்தைச் சேர்ந்த வெட்டிவேர் அதிக வாசம் உடையது.


வெட்டிவேர் ஊறவைத்த நீரை குடித்து வந்தால் காய்ச்சல், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, உடல் சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மனஅழுத்தம் போன்றவை குறையும்.

மண்பானை தண்ணீரில் வெட்டிவேரை போட்டு குடித்தால் தாகத்தை தணித்து உற்சாகத்தை அளிக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அரைத்து அதனை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால் வெயிலால் ஏற்படும் வியர்வை மற்றும் அரிப்பு நீங்கும்.

மூட்டு வலி, கால் வலி பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயுடன் வெட்டிவேரை கலந்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கொட்டை நீக்கிய கடுக்காய், வெட்டி வேர் இரண்டையும் கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மறைந்துவிடும். வெட்டிவேர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறுமணத்தையும் தரும்.