திங்கள், 30 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மஞ்சள் பாலில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்...!

மஞ்சள் மற்றும் பால் இவற்றுக்கு இயற்கையான ஆண்டிபயாடிக் பண்புகள் உண்டு. உங்கள் அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்கள் நோயை தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

 
பால் மற்றும் மஞ்சள் சேரும் போது எண்ணிலடங்கா மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது. அபாயகரமான சுற்றுச்சூழல், நச்சுகள்  மற்றும் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகள் போன்றவைகளை அழிக்கும் ஒரு பயனுள்ள தீர்வாக அமைந்திருக்கிறது.
 
மஞ்சள் தூள் பால் எப்படி செய்வது?
 
மஞ்சள் கிழங்கு (பொடித்து) அல்லது மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், 150 மிலி பால், பாலை நன்கு காய்ச்சி அதில் மஞ்சள் தூள்  சேத்து காய்ச்ச வேண்டும். பிறகு இறக்கி வடிகட்டி ஆற வைத்து குடிக்க வேண்டும். அதனுடன் தேவைப்பட்டால் சிறி நாட்டு  சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
 
மஞ்சள் தூள் பால் நன்மைகள்:
 
1. சுவாச நோய்
 
மஞ்சள் பால் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு, இது பாக்டீரியா தொற்று, வைரஸ் நோய் போன்றவற்றை தடுக்கிறது.  அது நோய்கள், சுவாச அமைப்பு, மசாலா மற்றும் உடல் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்கு விரைவான நிவாரணம்  வழங்குகிறது.
 
2. புற்றுநோய்
 
இந்த பாலை குடிப்பதால் மார்பக, தோல், நுரையீரல், புரோஸ்டேட், மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் வளர்ச்சியை  எதிர்த்து போராடுகிறது. புற்றுநோய் செல்களை தடுக்கும் மற்றும் கீமோதெரபியினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைக்கிறது.
 
3. எலும்பு, மூட்டு
 
மஞ்சள் பாலை குடித்து வந்தால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் காரணமாக ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்த முடியும்.
 
4. இருமல்
 
மஞ்சள் பால் குளிர் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்த்து போராடும்  மருத்துவ குணம் கொண்டுள்ளது.