திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள சூரியகாந்தி விதைகள் !!

சூரியகாந்தி விதையின் எண்ணெய், சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள எண்ணெய் நல்ல கொழுப்பு வகையை சார்ந்தது இந்த கொழுப்பு இதயத்திற்கு மிகவும்  நல்லது.

சூரியகாந்தி விதையின் மேற்புறத்தில் மெல்லிய ஓடு அமைந்து இருக்கும். இதனை உமி என்று குறிப்பிடுவார்கள். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான  ஊட்டச்சத்துக்களை ஏராளமாக கொண்டுள்ள இவ்விதையில், வைட்டமின் ஈ, பி, மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம்,  செலீனியம் போன்றவை கணிசமான அளவில் உள்ளன.
 
இவை தவிர, இரும்பு மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன. களைப்பை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வையும், தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது. குடல் எரிச்சல்,  மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.
 
சூரிய காந்தி செடியின் விதைகளில் உள்ள வைட்டமின் - ஈ செலீனியம் முதலான ஆன்டிஆக்ஸிடன்ட் சாதாரண காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற பல நோய்களை எதிர்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது.
 
பொதுவாக சூரியகாந்தி விதைகள், சமையல் எண்ணெய்யாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நல்ல சுவையுடைய இதனைப் பருப்புகள் போலவே மென்று சாப்பிடலாம். நியாசின், வைட்டமின் இ சூரிய காந்தி விதையில் அதிகம் உள்ளன. 
 
நியாசின் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளைக் குறைக்கும். கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும்  சூரியகாந்தி விதையில் உள்ளன. இவை, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.