செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (17:30 IST)

ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிடுவதால் இத்தனை அற்புத பலன்களா...!!

Almond Resin
பாதாம் பிசினில் தாதுகள் அதிகம் நிறம்பியுள்ளது எனவே அவை உடலின் எலுப்புகள் மற்றும் தோலிற்கு மிகவும் முக்கியமானதாகும்.


உடல் சூட்டினால் அவதிப்படுவேற்கு இது மருந்தாகும். பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைத்து சிறுது நேரம் கழித்து அதை சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

தற்போது பலரும் அதிகமாக கூறும் நெஞ்செரிச்சல் உணவு செரிமான பிரச்சனை(அசிடிட்டி) போன்றவைகளுக்கு பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிட்டால் அவை நீங்கும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீர் பாதையில் வளரும் சதைகளை பாதாம் பிசின் கரைக்கும் என்று சித்த மருத்துவத்தில் நம்பப்படுகிறது.

ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும். கோடைகாலங்களில் ஏற்படும் நீர்வறட்சி மற்றும் நீர் சுருக்கு போன்றவை நீங்கும்.

பாதாம் பிசினை பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். வாந்தி, மயக்கம், பித்தம் போன்ற நோய்களுக்கு பாதாம் பிசின் தீர்க்கும்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும். உடல் எடை கூட விரும்புவார்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்.