1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறதா பயத்தங்காய் !!

பயத்தங்காய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். இந்தக் காய் பசியைத் தூண்டி நீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும். இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தோ, கறி செய்தோ சாப்பிடலாம்.

காராமணியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியது. அடிக்கடி காராமணி சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.
 
கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலேட் சத்து காராமணியில் நிறைய உண்டு. ஃபோலேட் சத்து நிறைந்த உணவுகள்தான் பிறக்கும் குழந்தையை நரம்பு மண்டலக் கோளாறுகள் இல்லாமல் காக்கும்.
 
பயத்தங்காயிலுள்ள நார்ச்சத்தானது எடைக்குறைப்புக்கு உதவி, நீரிழிவைக் கட்டுப் படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. காராமணியில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ், இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
 
பயத்தங்காய் வயிறு, கணையம் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் சீரான குடல் இயக்கத்துக்கு உதவி, சிறுநீர் பாதை அடைப்பை சரிசெய்து, சிறுநீர் நோய்களையும் சரியாக்குகிறது.
 
பயத்தங்காயில் உள்ள லிக்னின் என்னும் பொருள் சில வகையான புற்றுநோய், பக்கவாதம், ஹைப்பர் டென்ஷன் மற்றும் ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட நோய்களில் இருந்து காக்கிறது.
 
கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து பயத்தங்காயில் அதிகமுள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் சீக்கிரமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.