முடி உதிர்வு பிரச்சனையை போக்க உதவும் மருத்துவ குறிப்புகள் !!
மனித உடலுக்கு தூக்கம் மிகவும் அத்யாவசியமாகும். தூக்கம் குறையும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் தலைமுடி உதிர்கிறது.
ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்கவேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம்.
சோம்பினை நன்கு அரைத்து தலையில் வாரம் மூன்று முறை தேய்த்து வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.
கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் தலைமுடி உதிர்வதை தடுப்பதோடு அடர்த்தியான முடியையும் பெறலாம். இரும்பு சத்து, புரோட்டின் நிறைந்துள்ள உணவு பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதின் மூலம் முடி உதிர்வதை தவிர்க்கலாம்.
புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ ஆகிய மூன்றையும் அரைத்து தலையில் பூசி 2 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்து வருவதன் மூலம் முடி உதிர்வதையும் குறைக்கலாம், முடியும் பட்டு போல காட்சியளிக்கும்.
இளநீர் மற்றும் தேங்காய்ப்பால் கொண்டு தலைமுடியை கழுவுவதன் மூலம் முடி கொட்டுவதில் இருந்து விடுபடலாம்.
இளஞ்சூடான எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைகின்றன.