செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எந்தெந்த சூப்கள் உடலுக்கு நல்லது என்பதை தெரிந்துக்கொள்வோம் !!

சூப் தயாரிக்கும்போது நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதில் எந்தெந்த சூப்கள் உடலுக்கு நல்லது என்பதை பார்க்கலாம்.

தக்காளியில் விட்டமின் சி, பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதுடன் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் மட்டுமே இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தக்காளி சூப்பை எடுத்துக் கொள்ளலாம்.
 
கீரை, ப்ரோக்கோலி, கேரட், பட்டாணி, குடை மிளகாய், பீன்ஸ் போன்ற பல்வேறு காய்கறிகளை கொண்டு தயார் செய்யப்படும் வெஜிடபுள் சூப்பில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது, உங்கள் உடல் எடையை வெகுவாக குறைக்கும்.
 
சிக்கன் சூப்பில் புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்தளவு கலோரி மற்றும் கொழுப்புகள் இருந்தாலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது, நோயெதிப்பு சக்தியை அதிகரிப்பதுடன் அழற்சியை குறைக்கிறது.
 
காளான் சூப்பில் புரோட்டீன், நார்ச்சத்துகள் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை தருகிறது. மேலும், இது உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது.
 
காலிபிளவர் சூப்பில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், குறைந்த அளவு கலோரிகள் உள்ளன.