திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சந்தன ஃபேஸ் பேக்கை உபயோகித்தால் வெள்ளையாகலாம்

சந்தன ஃபேஸ் பேக்கை உபயோகித்தால் வெள்ளையாகலாம்

கோடை காலத்தில் தோல் வறட்சி, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கை பொருள்களை வைத்து செய்யப்படும் மருத்துவம் நல்ல தீர்வை தரும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் நீக்கலாம்.


 
 
* சந்தனப் போடியில் தக்காலியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.
 
* எலுமிச்சை சாற்றுடன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உல்ல இறந்த செல்கள் நீங்குவதோடு, பருக்கள் வாராமலும் இருக்கும்.
 
* தயிரை சந்தனப் பொடியில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகும்.
 
* முட்டையை நன்கு அடித்து, தேன் மற்றும் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.
 
* பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் அழகாக இளமையுடன் காணப்படும்.