1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகள்....!!

பொதுவாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இஞ்சியில் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் ஆண்டி வைரஸ் பணொஉகள் அதிகம் உள்ளது.


இதேபோல் இஞ்சியில் உள்ள ஜின் ரெரோல், நிங்கரோன் ஆகியவை வைரஸ் பெருக்கத்தை தடுக்கும். இவை வைரஸ்ஸை செல்களுக்குள் நுழையவிடாமலும் போராடும்.
 
அதிமதுரத்தில் உள்ள சிளைசிரைசின், லிகுரிடிஜெனின், கிளாபிரிடின் ஆகியவை வைரஸ்க்கு எதிராக போராடும். சீனர்கள் இதை அதிகம் பயன்படுத்தியே கரோனாவில் இருந்து மீண்டனர்.
 
புதினாவில் ஆண்டி வைரல் பண்பு உள்ளது. இதை அடிக்கடி சமையலில் சேர்த்துவர கரோனா காலத்தில் நோய் எதிர்ப்புத்தன்மை கூடும்.
 
சமையலுக்கு பரவலாகவே நாம் பூண்ட பயன்படுத்துகிறோம். இதில் ஆண்டி வைரல் பண்பு அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை பூண்டுக்கும்  உண்டு.
 
கற்பூரவள்ளியில் உள்ள கார்வாக்ரோல் ஆண்டி வைரல் பண்பை வழங்கும். கற்பூரவள்ளியை வெறும் வாயில் சாப்பிட்டால் நல்ல பலன் கொடுக்கும்.
 
துளசியிலும் ஆண்டி வைரல் பண்பு அதிகம். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் துளசியை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கிருமி  தாக்கமும் போகும்.
 
சமையலில் வாசத்துக்கு சோம்பை சேர்ப்போம். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைக்கும். சாதாரணமாக நம்  வீட்டில் கிடைக்கும் இந்த மூலிகைகளை சாப்பிட்டே நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.