செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (15:31 IST)

உடல் எடையைக் குறைக்க உதவும் கருணைக்கிழங்கு

கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. உடல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில்  கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கருணைக் கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை அதிகமாக யாரும் பயன்படுத்தவதில்லை. கருணைக்கிழங்கு ஜீரண மண்டலம்  சிறப்பாக செயல்படவும் மூலநோயை குணப்படுத்தவும் உதவுகிறது.
 
கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து உடல் உறுப்புகளுக்கு பலம்  தருவதாகவும் இருக்கிறது.
 
கருணைக்கிழங்கு சிறிது காரல் தன்மையுள்ளதால் கிழங்கை வேக வைக்கும் போது சிறிது புளியிட்டு வேக வைத்தால் காரல் தன்மை குறையும். கருணைக்கிழங்கை சிறிது நாள் வைத்திருந்து சமைக்கும் போது காரல் தன்மை குறையும்.
 
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும். கருணைக்கிழங்கு ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்தது. உடலுக்கு உறுதியளிக்கக் கூடியது, பசியை  உண்டாக்கும் இயல்புடையது. 
 
பெண்களை வாட்டி எடுக்கும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக் கிழங்கை சாப்பிட்டால் உடல்வலி காணாமல்  போய்விடும்.