வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 18 டிசம்பர் 2021 (14:06 IST)

வெந்நீர் அருந்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் !!

உணவு சாப்பிட்ட பின் இளஞ்சூடான நீர் அருந்துவது இதயத்திக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இளம் சூடான தண்ணீரைக் குடிப்பதால், புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க முடியும்.

மேலும் நாம் சாப்பிடும் உணவானது எளிதில் செரிமானம் அடைவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களை தடுக்கிறது.எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீரைக் குடிக்கலாம்.
 
வெந்நீர் அருந்துவதால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். உயர் ரத்த அழுத்தம், கீழ் வாதம், மன அழுத்தம் போன்றவை கட்டுப்படும். உணவு மண்டலம், சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் குணமாகும். சுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை போன்றவற்றில் உள்ள கோளாறுகள் சரியாகும்.
 
நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் எண்ணெய் மற்றும் கொழுப்புகளை குளிர்ந்த நீர் இன்னும் கெட்டியாக மாற்றுகிறது. இதனால் செரிமான நேரம் அதிகரிக்கிறது மற்றும் இந்த கொழுப்புகள் கரையாமல் குடலிலேயே தங்கி விடுகின்றன
 
உணவுக்கு பின் வெந்நீர் அருந்தும்போது உணவையும், கொழுப்பையும் நன்றாக உடைத்து தருவதால் செரிமான மண்டலம் எளிதாக இயங்குகிறது.
 
உடற்பயிற்சி செய்பவர்கள் சூடான நீர் பருகுவது அவர்களது உடல் வெப்பநிலையையும் சீராக பராமரிக்க உதவுகிறது.