1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By sivalingam
Last Updated :உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள் , வெள்ளி, 10 மார்ச் 2017 (07:16 IST)

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்

உடல் எடை அதிகரிப்ப்பு என்பது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது. உடல் எடை அதிகரிப்பினால் பல துன்பங்களுக்கு ஆளாவதால் உடல் எடையை குறைக்க பலர் ஜிம்மை நாடுகின்றனர்.




ஒருசிலர் அறுவை சிகிச்சை உள்பட ஒருசில சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் ஒருசில பழங்களை ரெகுலராக சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று கூறியுள்ளனர்.

உடல் எடை அதிகரித்தவர்களுக்கு உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை அதிகரிக்காமல் இருக்க நினைப்பவர்களுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பழ டிப்ஸ்கள் உபயோகமாக இருக்கும்.

1. ஆசிட் பழங்கள் என்று கூறப்படும் அமிலச்சத்துள்ள பழங்கள் சாப்பிட்டால் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும். உதாரணமாக ஆரஞ்சு, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களையும், ஆப்பிள், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, கிவி, பேரிக்காய், தக்காளி போன்ற பழங்களில் தினமும் ஏதாவது ஒரு பழங்கள் சாப்பிட வேண்டும்

2. அமிலச்சத்து குறைவாக இருக்கும் துணை அமிலச்சத்துள்ள பழங்கள் என்று கூறப்படும் செர்ரி, ரேஸ்பெர்ரி, நெல்லிக்காய், பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி, பீச், பியர்ஸ், நாவல் பழம், பப்பாளி, அத்தி, ஆப்ரிகாட்ஸ், மாம்பழம், வெள்ளரிக்காய், கொய்யா, லிச்சி ஆகிய பழங்களை சாப்பிட்டால் நீங்களும் ஸ்லிம் ஆக இருக்கலாம்

3. இனிப்புப் பழங்கள் என்று கூறப்படும் வாழைப்பழம், திராட்சை, முலாம் பழம், கிர்ணிப்பழம், தர்பூசணி, பலாப்பழம், சப்போட்டா.ஆகிய பழங்கள் ஜீரண சக்திக்கு உதவுவதால் உடலுக்கு நன்மை தரும் பழங்கள் ஆகும்

4. நட்ஸ்கள் என்று கூறப்படும் முந்திரி, பாதாம், வால்நட், வாதாங்கொட்டை, பிஸ்தா, பைன் நட், ஹிக்கரி ஆகிய பழங்கள் உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் வல்லமை படைத்தவை

5. உலர்பழங்கள் என்று கூறப்படும் பேரீச்சை, அத்தி, ஆப்ரிகாட், செர்ரி, கிரேன் பெர்ரி, உலர் திராட்சை ஆகிய பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் பழங்கள்

மேற்கண்ட பழங்களில் ஒன்றை தினமும் எடுத்து கொண்டால் உடல் எடை கட்டுக்கோப்புடன் இருப்பதோடு, உடல் ஆரோக்கியமும் நன்'றாக இருக்கும்.