வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடலில் உள்ள நச்சுகளை அகற்றும் உணவு முறைகள்...!!

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளதோடு, குடலைச் சுத்தம் செய்யும் தன்மையும் வாழைப்பழத்திற்கு உள்ளது. எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள்.
 
முதலில் நாம் ஆரோக்கியமால இருக்க நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்து வந்தாலே பாதி நோய் தீர்ந்துவிடும்.
 
பூண்டு சாப்பிடுவதால், உடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, உடல் சுத்தமாகும். குறிப்பாக பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும். அதற்கு பூண்டு பற்களை பச்சையாகவோ அல்லது  பாலுடன் சேர்த்தோ எடுத்து வரலாம்.
 
முடிந்த அளவு கீரை வகைகளை சாப்பிடுங்கள். கீரை குடலுக்கு மட்டும் இன்றி உடலில் ஒட்டுமொத்த பாகத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். அதேபோல் எலுமிச்சை சாறு வைட்டமின் சி சத்துடன் புத்துணர்வு தருவதுடன் குடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் கிருமிகளையும்  அழிக்கிறது.
 
நார்ச்சத்துள்ள உணவுகளான ஓட்ஸ், முழு தானியங்கள், பார்லி, கோதுமை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்து வந்தால், குடல் சுத்தமாகும். அதுமட்டுமின்றி நார்ச்சத்துள்ள உணவுகள், குடலில் உள்ள நீரால் மலத்தை மென்மையாக்கி, எளிதில்  வெளியேற உதவும்.
 
இஞ்சியை மையாக அரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். சிலர்  காலையில் அருந்தும் டீயில் இஞ்சி சேர்த்து அருந்துவார்கள்; அதுவும் உடலைச் சுத்தமாக்கும். இஞ்சியை நீர் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன்  கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமலிருக்கும். 
 
முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் வெளியேறும்.
 
மூன்று அல்லது நான்கு கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸி அல்லது ஜூஸரில் அரைத்து வடிகட்ட வேண்டும். அதனுடன் சிறிது நீர் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்துக்கொள்ளலாம். இதை வாரம் ஒருநாள்  குடித்தால், உடலில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும்.