திங்கள், 30 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எலும்புகள் மற்றும் மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும் ஈச்சம்பழம் !!

இனிப்புச் சத்து கொண்ட இயற்கை உணவாக ஈச்சம்பழம் இருக்கிறது. ஈச்சம் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் பலத்தை தருகிறது.

தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஈச்சம் பழங்களை சாப்பிடுபவவர்களுக்கு கண்களின் பார்வை திறன் மேம்படும். கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.
 
ஈச்சம் பழத்தில் உடலுக்கு தீங்கான பொருட்களை அழிக்கும் சக்தி அதிகம் உள்ளன. 
 
வயிற்று போக்கால் அவதியுறுபவர்கள் தினமும் மூன்று வேலை சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு நிற்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும்.
 
போதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள், போதை பொருள் பயன்படுத்துவதற்கு பதிலாக சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது கொஞ்சம், கொஞ்சமாக போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கும். உடல் நலத்தையும் மேம்படுத்தும்.
 
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாதது, மலட்டு தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 
 
தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில ஈச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தினால் நரம்புகள் வலுப்பெற்று ,ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.