புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (14:09 IST)

இலந்தை பழத்தினை சாப்பிட்டு வருவதன் மூலமாக என்ன பயன் தெரியுமா...?

இலந்தைப் பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதன் மூலமாக வயிறு எரிச்சல் ஏற்படும்.


சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இலந்தைப் பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவதை, இந்த இஅலந்தைப் பழத்தினை சாப்பிட்டு வருவதால் தடுக்கும்.

ஒரு சிலர் தூக்கமின்மை பிரச்சனையைனால் மிகவும் அவஸ்தைப்படுவதுண்டு. அவர்கள் இந்த பழத்தினை சாப்பிட்டு வருவதன் மூலமாக நரம்பிற்கு நல்ல ஒரு வலிமையினை தரும்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் நமது உடலில் அதிகரிக்கும் போது தலை வலி, மயக்கம் போன்ற சில பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. எனவே பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட அனைவரும் இந்த இலந்தை பழத்தை கிடக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவதன் மூலமாக பித்தத்தின் நிலை சீராகும்.

இலந்தைப் பழத்தினால் பித்தத்தினால் ஏற்படும் மயக்கமானது தெளிவாகிறது. வாதத்தினால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளினால் உண்டாகும் வியாதிகள் அனைத்தையும் இலந்தைப் பழம் தீர்த்து வைக்கிறது.

சீதளத்தினால் உண்டாகும் வியாதிகளை நீக்கு வதிலும் இலந்தைப் பழம் பெருந் தொண்டாற்று கிறது. உடலில் ஏற்படும் வலிப்பு, வலிகள் ஆகிய எல் லாமே இலந்தைப் பழத்தைப் பார்த்ததும் பஞ்சாகப் பறந்தோடுகின்றது.

அஜீரணக் கோளாறுகளுக்கு இதனை உண்டால் அஜீரணம் நீங்கி நல்ல பசி எடுக்கும். எலும்பு சத்து குறைவாக இருந்தால் அதாவது லேசாக கீழே விழுந்தால் கூட எலும்புகள் உடைந்துவிடும். அவர்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் எலும்புகள் நன்றாக வலுப்பெறும்.