திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா...?

செலீனியம்: நம் செல்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சீர்செய்ய ஒரு வகையான புரதச் சத்து தேவை. அந்தப் புரதத்தை உருவாக்க நம் செல்களுக்கு செலீனியம்  தேவை.

வைட்டமின் சி: எலும்பு, தோல், நரம்புகள் போன்றவற்றிலுள்ள திசுக்கள் வளர்ச்சியடைய வைட்டமின் சி மிக மிக அவசியம். வைட்டமின் பி6: நரம்பு மண்டலத்திற்கு மிகவும் முக்கியம்.
 
மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது. நம் உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதன் மூலம், பல நோய்களில் இருந்தும் நம்மைக் காக்கிறது.
 
நார்ச்சத்து: சாப்பிட்டு வெகுநேரம் பசியில்லாமல் இருப்பதற்கும், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்தவும் நார்ச்சத்து மிகவும் அவசியம்.
 
மாங்கனீஸ்: நம் மூளை சாதாரணமாக வேலை செய்ய மிகவும் தேவையான பொருள். நம் நரம்பு மண்டலம் சாதாரணமாக இயங்கவும், உடலிலுள்ள என்ஸைம்கள் சீராக இருப்பதற்கும் நம் உடலில் 20 மில்லிகிராம் மாங்கனீஸ் இருக்க வேண்டியது கட்டாயம்.
 
ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இருந்தால் ஒரு பல் பூண்டை எடுத்து அதை கஷாயத்திலோ, தேநீரிலோ கலந்து குடித்தால் போதும்! உடனடி நிவாரணம் நிச்சயம்.
 
பொடுகுத் தொல்லைக்கு, சிறிது பூண்டுப் பொடியை எலுமிச்சையுடன் கலந்து தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். பேன் பிரச்சனைக்கு, மூன்று பல் பூண்டை அரைத்து அத்துடன் எலுமிச்சை கலந்து தலையில் மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து குளித்துவிட்டால் போதும்.
 
முடி உதிர்வதைத் தடுக்க, இளம் சூடான தேங்காய் எண்ணெயில் பூண்டை அரைத்துக் கலந்து அதைத் தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து  குளித்துவிட வேண்டும்.