1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஊட்டசத்துக்கள் நிறைந்த உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்!

உருளைக்கிழங்கில் எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.


 
 
யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
 
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 
தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப் கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.
 
இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.
 
முகத்திற்கு பீளிச்சிங் போல செயல்படும்
 
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது.
 
செரிமானம்
 
ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக்கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது. 
 
உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது? 
 
வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம்.
 
சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டும்
 
எனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும். குண்டானவர்களை மேலும் குண்டாக்கிவிடும்! எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். (ஆசைக்காக) வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.