1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் கறிவேப்பிலை !!

முடி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க‌ நீங்கள் கறிவேப்பிலை இலைகளை உணவின் மூலம் உட்கொள்ளுவதன் மூலம் அல்லது உச்சந்தலையில் சாறு எடுத்துத் தடவுவதன் மூலமும் முடியின் தண்டுப்பகுதியினை வலுப்படுத்திச் சரி செய்ய முடியும்.

தலையின் பொடுகினைக் கூடக் கறிவேப்பிலை இலைகள் தடுக்க உதவுகின்றன. எனவே கறிவேப்பிலை இலைகளை நன்றாக உணவில் சேர்த்துக் கொண்டு முடி சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவது மிகவும் எளிது.
 
கறிவேப்பிலை இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது. வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது. குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு. சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
 
வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது. பச்சைக் கறிவேப்பிலை இலைகளைச் சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
 
கறிவேப்பிலை கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது. கல்லீரலைப் பாதுகாக்கிறது. கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது. நீரிழிவு நோய்க்குத் தீர்வு  கிடைக்கிறது.
 
கறிவேப்பிலை நோய் மற்றும் இத நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது. முடியை வலுவாக்குகிறது. செரிமான மண்டலத்திற்கு நல்லது.