திங்கள், 22 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள புதினாவின் பயன்கள்...!

புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது. புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும். புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல்  நல்லது.
தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும் 
 
புதினாக் கீரை 60 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால்  வயிற்றுப் பொருமல் நீங்கும். 
 
வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல  மருந்தாகும்.
 
மணமூட்டியாக சமையலைக் கமகம ஆக்குகிறது, காய்கறி பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை  ஊரைக் கூட்டும்.
 
பழச்சாறு பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
 
பித்தத்தால் ஏற்படும் பாத எரிச்சலுக்கு, ஒரு கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எரிச்சல் உண்டான பாதத்தில் ஒத்தடம் கொடுக்க எரிச்சல் குறையும்.
 
மூச்சுத்திணறல் உடனே நிற்க வேண்டுமானால், புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து இந்த ஊறல் குடிநீரைக் குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.
 
கைப்பிடியளவு புதினாக் கீரையைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டுச் சாப்பிட்டு வந்தால் வாய் வேக்காளம் குணமாகும்.
 
புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை  குறையும்.
 
வெயிலிலிருந்து களைப்பாக வீடு திரும்பிய கணவருக்கோ, விளையாடிவிட்டு வந்த குழந்தைகளுக்கோ கொடுத்தால் உடனடி புத்துணர்ச்சி  கிடைக்கும்.