வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பூசணிக்காய் விதைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்...!!

பூசணிக்காய் விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம்,  தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன.

இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி  விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும். மக்னீசியம் ரத்த அழுத்தம் மற்றும் 'சடர்ன் கார்டியாக்  அரெஸ்ட்' எனப்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும்.
 
இவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். 
 
துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற  பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள்.
 
தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.  சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.
 
ஆரோக்கியமான கொழுப்பு விதைகளில் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்கும். இதனுடன் ஆளி  விதைகளைச் சேர்த்து உண்டால் பலன் மேலும் அதிகரிக்கும்.
 
பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
 
ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். இந்த விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறையும். விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும்.