ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (11:15 IST)

கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்...!!

கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை அதிகமாக சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவற்றை நன்கு சுத்தப்படுத்தி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்கு உதவுகிறது.


உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும் உடலின் உள் உறுப்புகளில் எந்தவிதப் புற்றுநோயும் ஏற்படாமல் தடுப்பதற்கும் உதவுகிறது.

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து   தலைக்கு தடவி வந்தால் மேற்கண்ட தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்துயும் நீக்கும்.

இரத்த சோகை இருப்பவர்கள் கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரித்து இரத்தசோகையை குணப்படுத்துவதற்கு உதவுகிறது.

கறிவேப்பிலையில் 'வைட்டமின் ஏ' சத்து நிரம்பியுள்ளது. இந்த 'வைட்டமின் ஏ' நமது கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்த மிகவும் உதவுகிறது. கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை மிகவும் நல்லது.

கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். மேலும் தினமும்  கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.