1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (12:50 IST)

பாதாமை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்சிடென்டுகள் முற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை பெறலாம்.


பாதாமை சாப்பிட்டு வருவதன் மூலம் சுவாசக் கோளாறு, இதய நோய், நீரிழிவு நோய், சருமப் பிரச்சினை, முடி உதிர்வு, ரத்த சோகை போன்ற நோய்களைத் தடுக்கலாம்.

தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, முகத்தில் பாதாம் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் பொலிவு அதிகரிக்கும். மாதவிடாய் நின்ற பெண்கள், தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டுவந்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க முடியும்.

தினமும் 6-7 ஊறவைத்த பாதாம் பருப்புகளை ஈப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். உடல் எடையைக் குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள், தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை பெருக்கும் சக்தி கொண்டது, பாதாம். இதில் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன.