1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் அம்மான் பச்சரிசி !!

அம்மான் பச்சரிசி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது. குளிர்ச்சித் தன்மையானது. அம்மான் பச்சரிசி பால் ஒரு அரிய மருந்தாகும்.

தாய்ப்பால் சுரப்பு அதிகமாக பசுமையான அம்மான் பச்சரிசி செடிகளைச் சேகரித்துக் கொண்டு, நன்கு கழுவி, அரைத்து, எலுமிச்சம்பழ அளவு 1 டம்ளர் பாலில்  கலக்கி, தினமும் காலை, மாலை இருவேளைகள் பாலூட்டும் தாய்மார்கள் குடிக்க வேண்டும்.
 
ஆஸ்த்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணை மருந்தாகப் பயன்படுகின்றது. அதிக அளவில் உட்கொண்டால் வாந்தியைத்  தூண்டும்.
 
விந்து ஒழுகுதல் கட்டுப்பட அம்மான் பச்சரிசி மற்றும் கீழாநெல்லி ஆகியவற்றின் இலைகளைச் சம அளவாக எடுத்துக் கொண்டு, நன்றாக அரைத்து, எலுமிச்சம்பழ  அளவு, 1 டம்ளர் எருமைத் தயிரில் கலக்கி காலை வேளையில் மட்டும் 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
 
இரத்தக் கழிச்சல் குணமாக அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, 200 மி.லி. பசும்பாலுடன் கலந்து, தினமும் காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க வேண்டும்.
 
ஆஸ்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணை மருந்தாகப் பயன்படுகின்றது. அதிக அளவில் உட்கொண்டால் வாந்தியைத்  தூண்டும். இதன் நோய் எதிர்ப்புச் சக்தியும், காசநோயைக் கட்டுப்படுத்தும் பண்பும் மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.