வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பனங்கற்கண்டில் உள்ள அற்புத சத்துக்களும் பயன்களும் !!

பனங்கற்கண்டில் விட்டமின்கள் தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா மூச்சு பிரச்சனை இருமல் சளி ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனை போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

வாய் துர்நாற்றம் வீசுகிறதா கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.
 
தீராத சளி பிரச்சனை இருந்தால் அதற்கு இரண்டு பாதாம் பருப்பு, ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு அரை டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.
 
தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் அரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்
 
சிறிது பனங்கற்கண்டு பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். கண்பார்வை அதிகரிக்கும்.
 
2 டேபிள்ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டால், சிறுநீரகக் கல் பிரச்சினை சரியாகும்.