ஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ குணங்கள் !!
காசம் குணமாக ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காசம் குணமாகும்.
உடலில் ஏற்படும் வலிகள் குறைய ஆடாதொடை வேர்,கண்டங்கத்திரி வேர் பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வலிகள் குறையும்.
ஆடாதொடை இலையின் சாறும் தேனும் சம அளவு எடுத்து கலந்து, சிறிது சர்க்கரையும் சேர்த்து தினமும் 4 வேளை குடித்து வந்தால், நுரையீரல் ரத்த வாந்தி, கோழை மிகுந்த மூச்சு திணறல், இருமல், ரத்தம் கலந்த கோழை போன்ற வியாதிகள் குணமாகும்.
ஈரல் வலி குறைய ஆடாதொடை இலைச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். உலர்ந்த ஆடாதொடை இலையை பொடி செய்து, ஊமத்தம் இலையில் சுருட்டி புகைபிடித்தால் மூச்சு திணறல் உடனே நிற்கும்.
மூச்சுத்திணறல் குணமாகும். நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாக மருதம்பட்டை, ஆடாதொடை பொடி இவற்றை வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வந்தால் நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும்.
சளித்தொல்லை குறைய ஆடாதொடை இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவைகளை எடுத்து லேசாக அரைத்து வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை நீங்கும்.
ஆடாதொடையின் இலையையும் புதினா இலைகளையும் 1 கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, 200 மி,லி.யாக சுண்ட காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடிக்கலாம். அப்படி செய்தால் கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி போன்றவை குணமாகும்.