வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அற்புத மருத்துவ பயன்களை அள்ளி தரும் பாதாம் பிசின் !!

பாதாம் பிசின் ஒரு அற்புதமான ஆக்ஸிஜனேற்றியாகும், மேலும் தொடர்ந்து உட்கொள்ளும்போது முன்கூட்டிய முதுமையை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. பாதாம் பிசினில் தாதுக்கள் மற்றும் புரதங்களும் நிறைந்துள்ளன.

உடல் வெப்பம் அதிகமாவதால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையில் பணிபுரிவதாலும், இறுக்கமான கால்சட்டைகள் அணிவதாலும் உஷ்ணம் அதிகமாகி இன்று ஆண்கள் பலருக்கும் அவர்களின் விந்து நீர்த்து போய் விடுகிறது. தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலின் உஷ்ணம் தணிந்து, நரம்புகள் வலுப்பெற்று விந்து கெட்டிப்படும். மலட்டுத்தன்மை இருந்தாலும் அது நீங்கும்.
 
உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று வெள்ளைப்படுதல். இந்த பிரச்சனை குணமாக மூன்று நாட்கள் தினமும் காலை, மாலை, இரவு என மூன்று வேலையும் ஊறவைத்த பாதாம் பிசினை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அப்படியே சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.
 
பாதம் பிசின் வயிற்றிற்கு மிகவும் நல்லது மற்றும் அமிலத்தன்மை, வயிற்றுப் புண்களைக் குறைப்பதற்கான ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம். பாதாம் பிசினை தேங்காய்ப் பாலுடன் கலந்து அதில் வெல்லத்தை சேர்த்து உட்கொள்ளலாம். தேங்காய் பால் அமிலத்தன்மை மற்றும் வயிற்று எரிப்பு இரண்டையும் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 
பாதாம் பிசின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் காயங்களை குணப்படுத்தும் பண்புகள் இரண்டையும் கொண்டுள்ளது, பாதாம் பிசின் தோல் பராமரிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பாதாம் பிசினை தோலில் வெளிப்புறமாகப் பயன்படுத்தும்போது வெப்பத்தை குறைக்கிறது மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. 
 
பாதாம் பிசின் கோடைகாலத்தில் வெப்பத்தை குறைப்பதற்கு சாப்பிடலாம் அல்லது வெளிப்புறமாகவும் பயன்படுத்தலாம்.