வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சருமத்தில் உள்ள இயற்கையான பொலிவை வெளிக்கொண்டு வரும் பாதாம் எண்ணெய் !!

சருமத்தில் உள்ள இயற்கையான பொலிவை வெளிக்கொண்டு வருகின்றது. மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உங்களுடைய சருமத்திற்கு மென்மையான பளபளப்பை அளிக்கின்றது.

1. தேன் மற்றும் பாதாம் எண்ணெய் அரை தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெய்யை ஒன்றாக எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் தடவவும். அதன் பின்னர் இந்தப் பூச்சை ஒரு இரவு முழுவதும் உலர விடவும். மறுநாள் காலையில், வெதுவெதுப்பான நீரில் முகத்தை  கழுவவும். இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை முயற்சி செய்யவும்.
 
2. கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் 1 தேக்கரண்டி அலோ வேரா ஜெல்லுடன் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யை சேர்க்கவும். இந்தக் கலவையை சுமார் 5-10 நிமிடங்கள் வரை உங்கள் சருமத்தின் மீது மெதுவாக மசாஜ் செய்யவும். அதன் பின்னர் ஒரு மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை முயற்சி செய்யவும்.
 
3. ரோஸ் வாட்டர் மற்றும் பாதாம் எண்ணெய் 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டருடன் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய்யை சேர்க்கவும். இந்தக் கலவையை உங்கள் முகத்தில் மெல்லியதாக படர விட்டு ஒரு இரவு முழுவதும் உலர விடவும். மறுநாள் காலையில், மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து  உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு 3 முதல் 4 முறை முயற்சி செய்யவும்.