1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2016 (11:01 IST)

கத்தியுடன் கட்டிடத்தில் ஏறும் இளைஞரின் வைரல் வீடியோ

மும்பையில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் பால்கனி வழியாக 3 மாடிகள் ஏறிச் சென்று கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
மும்பை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் இரு குடும்பத்தினர் இடையே பயங்கரமான சண்டை நடைப்பெற்றுள்ளது. அதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவர் பழிவாங்கும் நோக்கத்தோடு பால்கனியாக வழியாக 3 மாடி ஏறிச்சென்றார்.
 
மற்றொரு குடும்பத்தினர் அவர்கள் வீட்டின் பின் பக்க கதவை பாதுக்காப்பாக பூட்டிவிட்டனர். கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் அந்த இளைஞர் கத்தியால் கதவில் அடிக்கிறார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
கட்டிடத்தின் மீது ஏறிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.